Type to search

குடியுரிமை அதிகாரிகளே எச்1 பி விசா விண்ணப்பங்களை நிராகரிக்க முடியும்

USA USA Head Line USA Top Story USA Trending News WORLD

குடியுரிமை அதிகாரிகளே எச்1 பி விசா விண்ணப்பங்களை நிராகரிக்க முடியும்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவில் எச்1 பி விசா நீட்டிப்பு கோருவோரின் விண்ணப்பங்களை, குடியுரிமை அதிகாரிகளே நேரடியாக நிராகரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (us H1B visa applications Citizens United States reject)

அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரிபவர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். விசா நீட்டிப்புக்காக அவர்கள் 240 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என்ற விதியை மாற்றிய அதிபர் டிரம்ப் நிர்வாகம், விசா காலம் முடிந்ததும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் புதிதாக எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, கேட்கப்பட்ட அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அவ்வாறு ஆவணங்களை சமர்பிக்கத் தவறினால்,அந்த விண்ணப்பங்களை குடியுரிமை அதிகாரிகளே நேரடியாக நிராகரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய முறை செப்டம்பர் 11ஆம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

tags :- us H1B visa applications Citizens United States reject

மேலதிக உலக செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like