Type to search

2020 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன் டிரம்ப் சபதம்!!

USA USA Head Line USA Top Story USA Trending News WORLD

2020 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன் டிரம்ப் சபதம்!!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

2020ல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். என் மொத்த வாழ்க்கையும் வெற்றியை பற்றியதுதான். நான் பெரும்பாலும் தோல்வி அடைந்தது இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால், நான் தோற்றதே இல்லை. இந்த வாசகத்தை பல வருடங்களுக்கு முன்பு உலகம் முழுக்க பிரபலமாக ஆவதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அதே நிகழ்ச்சியில் தனக்கு அமெரிக்க அதிபராக ஆசை இருக்கிறது என்றும் கூறினார்.(Trump 2020 US presidential election win)

அப்போது அதை பலர் கிண்டல் செய்தாலும், சென்ற முறை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிரடியாக பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்றார். 2016 இறுதியில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, 2017 ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அதன்பின், இரண்டு வருடம் கடந்த நிலையில் இன்னும் அவர் ஆட்சி முடிய முழுதாக இரண்டு வருடம் இருக்கிறது.

இந்த இரண்டு வருடத்தில் அமெரிக்க விசா விதிகள் மாற்றம் தொடங்கி, வடகொரியா உட்பட உள்நாட்டு , வெளிநாட்டு உறவுகளில், பிரச்சனைகளில் பல முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இரண்டு முறை அதிபராக இருந்துள்ளார். அவரை போல சிலர் மட்டுமே, அமெரிக்காவில் இரண்டு முறை அதிபராக இருந்துள்ளனர். அந்த வரிசையில் தானும் சேர முடிவெடுத்துள்ள டிரம்ப், அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற நிலையில் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக அதிபர் பதவிக்காக போட்டியிடுவேன் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். மக்களின் வரவேற்பு , ஆதரவு தனக்கு மிகவும் அதிகமாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பேச்சுக்கு அவரது கட்சியினர் சிலர் ஆதரவும் தெரிவித்து இருக்கிறார்கள். சிலர் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tags :- Trump 2020 US presidential election win

மேலதிக உலக செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like